Vega EVX Car பற்றி அறிந்து கொள்வோம்.

Let's get to know Vega EVX Car

Vega EVX Car பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவர்க்கும் இருக்கும். இது இப்போது இலங்கை மக்களிடையே ஒரு பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்த Vega EVX Car இலங்கையில் தயாரிக்கப்பட ஒரு Car ஆகும். இதற்கான அனுமதியினை இலங்கை போக்குவரத்து திணைக்களத்தினால் மார்ச் மாதம் வழங்கப்பட்டு அதற்கான இலக்கத்தகடுகளும் கையளிக்கப்பட்டன.

இத்தகைய சிறப்பியல்புகளை கொண்ட Vega EVX Car பற்றி அறிந்து கொள்வோம்.


VEGA EVX CAR பற்றி.....


VEGA EVX Car யின் வரலாறு (History)

Vega EVX என்பது இலங்கையின் வாகன உற்பத்தியாளரான Vega Innovations ஆல் உருவாக்கப்பட்டது. Vega EVX Car மின்சார பேட்டரியில் இயங்கும் தன்மை கொண்டது. இவை இரண்டு இருக்கைகளை கொண்ட AWD Sports Model Car ஆகும்.. இந்த Vega EVX Car இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் Sports Model Car மற்றும் தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார Sports Car ஆகும்.


VEGA EVX Car யின் வளர்ச்சி (Development)

2013ஆம் ஆண்டு Vega Innovation ஆனது Dr. Harsha Subashinghe மற்றும்  Dr. Beshan Kulapala ஆகியோரால் நிறுவப்பட்டது. 2015 ஆம் ஆண்டு Vega Innovation ஆனது தனது முதலாவது Car ஆனா VEGA EVX யின் முதல் மாதிரியினை அறிமுகப்படுத்தி இருந்தது. இது 900 Horsepower (671 kW;912PS) இணை கொண்டு இருந்தது. இது 3.5 வினாடிகளில் 100Km இணை (62mph) எட்டும் திறன் கொண்டதாக வடிவமைத்தனர்.

2017 ஆம் ஆண்டு இவர்கள் குறிப்பிட்ட வளங்களுடன் VEGA EVX prototype car உருவாக்கப்பட்டது. இது அடுத்தடுத்த வருடங்களில் இதன் வணிகரீதியான உற்பத்திகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. முதலில் 25 அலகுகள் மாத்திரமே உற்பத்தி செய்வதாக முடிவாகி இருந்தது.


VEGA EVX Car யின் அறிமுகம் (Introduction) 

VEGA EVX யின் அடுத்தடுத்த பதிப்புக்கள் பற்றிய முன்மாதிரி 2020 யில் இடம்பெற்ற Geneva Motor Show யில் அறிமுகப்படுத்த இருந்தது. அனால் COVID-19 காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அது Live Stream மூலம் அதே Geneva Motor Show யில் அறிமுகம் செய்யப்பட்டது.


VEGA EVX Car யின் Performance

VEGA Innovation குறிப்பிடும் போது VEGA EVX ஆனது இரண்டு வினாடிக்குள் 0-100   km/h வேகத்தினை எடுக்கும் எனவும் இதனது உச்ச வேகம் 380km/h எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இதனது Battery range ஆனது 750Km வரை செல்லக்கூடியது எனவும் குறிப்பிட்டுள்ளது.


Vega EVX Car பற்றி அறிந்து கொள்வோம்.

Over View
ManufacturerVEGA Innovations
NameVega EVX Supercar
Production2022 (expected) 25 units
DesignerDhash M Gunaratne
Body and chassis
Class Super car
Body style 2-door coupe
Layout 4 motor torquing all-wheel drive
Powertrain
TransmissionAutomatic
Hybrid drivetrainPermanent AC Synchronous 4 Motor torquing all-wheel drive system
BatteryLFP Pouch cell 540V , Liquid cooled. 50 Cells per Module, 12 Modules 480kg.
Electric range750 km (466 mi)
Plug-in chargingOffboard charger
Dimensions
Wheelbase2,846 mm (112.0 in)
Length4,532 mm (178.4 in)
Width1,970 mm (77.6 in)
Height1,220 mm (48.0 in)
Curb weight1,900 kg (4,200 lb)

வேகா EVX Car யின் சில புகைப்படங்கள்

Let's get to know Vega EVX Car
Let's get to know Vega EVX Car
Let's get to know Vega EVX Car
Let's get to know Vega EVX Car
Let's get to know Vega EVX Car

Source:
Vega Innovation
Wikipedia

No Comment
Add Comment
comment url