QR கோட்டா புதுப்பிக்கப்படும் நாளில் மாற்றம்

New Resolution on QR Code for fuel

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் நள்ளிரவில் QR கோட்டா புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டது. இதனால் ஏற்படும் விநியோகச் செலவைக் குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், QR கோட்டா மூலம் வாரத்திற்கு பெறப்படும் எரிபொருளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சர் இது தொடர்பான ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

Twitter Post : 

Post a Comment