ஜப்பான் கடற்கரையில் 1.5 மீட்டர் விட்டம் கொண்ட மர்மமான கோளப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. கடலோர நகரமான ஹமாமட்சுவுக்குச் சொந்தமான கடற்கரையில் கோள வடிவப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மர்மமான கோளப் பொருளை கடற்கரைக்கு வந்த சில நகரவாசிகள் முதலில் பார்த்தனர். இதுகுறித்து நகராட்சி மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் நகர அதிகாரிகள் கடற்கரையை பாதுகாப்பான வலயமாக நியமித்து காவல்துறை மற்றும் இராணுவத்தை நிலைநிறுத்தி உள்ளனர்.
இது கடலில் வைக்கப்பட்டு இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத வெடிகுண்டாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. எனினும், அதில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என உறுத்தப்பட்டது.
ஜப்பானிய ஊடகங்கள் பின்னர் கோளப் பொருளின் உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காண எக்ஸ்-கதிர்கள் பயன்படுத்தப்பட்டன, மேலும் கோளப் பொருளுக்குள் எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்தன.
கோளப் பொருள் இரண்டு 'வடிவங்கள்' கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது இது ஏதோவொன்றுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் பின்னர் தெரிவித்தனர்.
Post a Comment