அஜித்தின் அப்பா மரணம்
நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 24ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய்யும் அஜித்தின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார்.
நேரில் கலந்து கொள்ள முடியாத சிலர் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்தனர்.
சூர்யா, கார்த்தி
இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இன்று நடிகர் அஜித் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினர்.
அஜீத் வீட்டு வாசலில் சூர்யா மற்றும் கார்த்தியின் கார் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
.@Karthi_Offl and @Suriya_offl visited #AjithKumar’s residence today and offered their condolences on the recent demise of AK’s dad #PSMani. pic.twitter.com/MqIWs8gzoB
Post a Comment