இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆட்டம் மழையால் தடை

Sri Lanka vs New Zealand: The first Test is suspended due to rain

இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆட்டம் மழையால் தடை : சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இன்றைய இறுதி நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டுள்ளது.

நேற்று ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லாதம் 11 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை 355 ரன்களும், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்களும் எடுத்தன. இலங்கை இரண்டாவது இன்னிங்சில் 302 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதன்படி இரண்டாவது இன்னிங்சில் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற நியூசிலாந்து அணி இன்று 257 ரன்கள் எடுக்க வேண்டும்.

Post a Comment