இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் எரிபொருள் விலை குறையும்: எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எரிபொருள் விலையில் மாற்றம் தொடர்பில் அறிவித்தல் விடுத்துள்ளார்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்த முறைமையில் மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி,
- 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.
- 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 135 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.
- சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.
- ஆட்டோ டீசல் விலை ரூ.80 குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.325.
- மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.
ஏப்ரல் முதல் வாரத்தில் திருத்தப்படவுள்ள எரிபொருள் விலை முன்கூட்டியே திருத்தம் செய்யப்படவுள்ளதாகவும், இன்று நள்ளிரவு 12 மணி முதல் குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றார்.
அடுத்த விலை திருத்தம் மே முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
Post a Comment