இன்று (09) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கைகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட 40 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
எதிர்வரும் 8ஆம் திகதிக்குள் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் சகல சேவைகளையும் முடக்கும் வகையில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் எச்சரித்திருந்தன. தொழிற்சங்கங்கள் வழங்கிய ஒரு வார கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அரசிடம் இருந்து பதில் கிடைக்காததால், இன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
Post a Comment