சில பொருட்களின் விலை மேலும் குறைந்தது

A few more items will drop in price before the New Year

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக இலங்கையில் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இந்த புத்தாண்டுக்கு முன்னர் பொருட்களின் விலைகள் மேலும் குறையும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த வருடம் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அரிசியின் விலை மேலும் குறையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை, லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை இன்று முதல் குறைத்துள்ளது.


அதன்படி, 

  • 425 கிராம் டின்ஃபிஷின் புதிய விலை ரூ.490. அதன் விலை குறைப்பு ரூ.30. 
  • ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை ரூ.97 ஆகவும், விலை குறைப்பு ரூ.22 ஆகவும், 
  • ஒரு கிலோ கோதுமை மாவின் புதிய விலை ரூ.225 ஆகவும், விலை குறைப்பு ரூ.10 ஆகவும் உள்ளது.


கடந்த வாரம் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No Comment
Add Comment
comment url