சிற்றுண்டி பொருட்களின் விலையை குறைக்க தீர்மானம்

Resolution to reduce the prices of snacks


உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலை குறைக்கப்படும் என அனைத்து இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான விலைகள் இன்று (09) அறிவிக்கப்படும் என அதன் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கோதுமை மாவின் விலையை நேற்று முதல் 15 ரூபாவினால் குறைக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பான் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

No Comment
Add Comment
comment url