நாடு முழுவதும் தொழிற்சங்க போராட்டங்கள் தொடரும் நிலையில், தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (14) பல மாவட்டங்களில் வைத்தியர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததால் அந்த வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை, ஜனாதிபதியின் முயற்சியின் கீழ் சம்பந்தப்பட்ட வைத்திய நிபுணர்களுக்கும் ஏனைய தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
ஆனால், அரசின் வரிக் கொள்கை, மின் கட்டண உயர்வு, தேர்தலை ஒத்திவைப்பு போன்ற கோஷங்களை முன்வைத்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
Post a Comment