சீனியின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

சீனியின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

சீனியின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு: இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்ட காலம் காலாவதியானது முக்கியமனாதாகும். தற்போது பிரேசிலில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களில் ஒரு கிலோ சீனியின் விலை ரூபா 230 ஆக இருந்துள்ளது. அனால் நேற்று ஒரு கிலோ சீனியின் விலை ரூபா 250 ஆக இருந்துள்ளது. இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்படாவிட்டாலும் 2 மாதங்களுக்கு போதுமான சீனியின் கையிருப்பு இலங்ககையில் உள்ளது என அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றைய ஒப்பந்த நாடுகளிடம் இருந்து தொடர்ந்து சீனி இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment