முந்திரி விலை உச்சத்தை தொட்டது

Cashew prices hit a peak

புத்தாண்டு சீசனை முன்னிட்டு முந்திரியின் தேவை அதிகரித்துள்ளதாக முந்திரி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


முந்திரிக்கு அதிக தேவை இருப்பதால், தேவைக்கேற்ப அதன் கொள்ளளவை வழங்க முடியவில்லை என முந்திரி கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.


இந்தநிலையில் தனியார் விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ முந்திரி 4000 – 5000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


ஆனால் முந்திரி கூட்டுத்தாபனத்தினால் ஒரு கிலோ முந்திரி 3000 முதல் 3500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், சில பகுதிகளில் உடைந்த முந்திரியை பல்வேறு வகையான பசைகளை பயன்படுத்தி ஒட்டப்பட்டு முழு முந்திரியாக விற்பனை செய்வதால் உயர்தர முந்திரி விற்பனை சரிவடைந்துள்ளதாக முந்திரி கழகம் தெரிவித்துள்ளது.

No Comment
Add Comment
comment url