வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு ஒரு செய்தி:
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து புதிய தொழில் ஒன்றை ஆரம்பிக்கும் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று (25) விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு 2 மில்லியன் வரையிலான குறைந்த வட்டி கடன்களை பெற்றுக்கொள்ளும் யோசனைக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, 2022 ஜூன் 30 ஆம் திகதி வரையான வருடத்தில் 30,915 பெண்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்லும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment