நடிகர் மனோபாலா திடீர் மரணம்

நடிகர் மனோபாலா திடீர் மரணம்

நடிகர் மனோபாலா திடீர் மரணம்

இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா இன்று திடீரென காலமானார். அவருக்கு வயது 69. உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மனோபாலா சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களும் வெளியாகின.


கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர், சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார்.


இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என மனோபாலா

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோபாலா, 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் ரஜினியின் ஊர்க்காவலன் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.


அதன் பிறகு நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் விவேக் நடிப்பில் வெளியான 'எப்படி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்' என்ற நகைச்சுவை திரைப்பட காட்சி மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு, பல படங்களில் அவரது ஒல்லியான தோற்றத்தைக் கேலி செய்யும் விதமான நகைச்சுவைகள் வரவேற்பை பெற்றன.


மனோபாலா எச்.வினோத்தின் சதுரங்க வேட்டை படங்களைத் தயாரித்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மனோபாலாவுக்கு ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். "பிரபல இயக்குனரும், நடிகருமான என் அருமை தோழர் மனோபாலா அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No Comment
Add Comment
comment url