இலங்கையில் இருந்து குரங்குகளை பெற சீனா தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, அமெரிக்காவும் இந்த நாட்டிலிருந்து குரங்குகளை பெற விண்ணப்பித்துள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
100,000 குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே பொருத்தமானது எனவும், விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என யாரும் கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment