டொலரின் பெறுமதி குறைவதால் பஸ் கட்டணமும் குறையும் : டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதால் வாகன உதிரி பாகங்களின் விலை இம்மாத இறுதிக்குள் குறையும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், டயர், பேட்டரி போன்ற உபகரணங்களின் விலை ஏற்கனவே ஓரளவுக்கு குறைந்துள்ளதால் ஏப்ரல் மாதத்தில் பேருந்து கட்டணத்தை குறைக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Post a Comment