துறைமுகம், வங்கிகள், ஆசிரியர்கள், அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளின் பல சேவைகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் அறிவித்துள்ளது.
நாடு தழுவிய வேலை நிறுத்தம், கடிதப் பணி, எதிர்ப்பு ஊர்வலம், கறுப்பு ஆடை அணிதல் போன்ற போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (01) 12 இடங்களில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சுமார் 40 தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment