எதிர்கால எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய அணுசக்தியை மாற்றாக பரிசீலிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன, தீர்மானத்தின் பிரகாரம் அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக வழிநடத்தல் குழுவும் 9 செயற்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அந்த குழுக்களால் தயாரிக்கப்பட்ட சுயமதிப்பீட்டு அறிக்கை தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமை வழங்கிய பரிந்துரைகளின் பிரகாரம் அணுசக்தி உற்பத்தி திட்டத்தை முன்னெடுக்கும் திறன் இலங்கைக்கு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி, அணுசக்தி சேதங்களுக்கான சிவில் பொறுப்புகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கை மற்றும் அணுசக்தி சேதங்களுக்கான கூடுதல் இழப்பீடு தொடர்பான ஒப்பந்தத்தில் மேலும் நடவடிக்கைகளை எடுப்பது பொருத்தமானது என்று அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரின் கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Post a Comment