வேலை நிறுத்தம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது

The Strike ended temporarily

வேலைநிறுத்தம் தற்காலிகமாக முடிவு: அரசின் வரிக் கொள்கையை உடனடியாக மாற்றக் கோரி நாடு தழுவிய நடைபயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

நேற்று (15) நடைபெற்ற ஒருநாள் வேலை நிறுத்தத்தில் அரச வைத்தியர்கள், விசேட வைத்தியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மின் பொறியியலாளர்கள், வங்கி அதிகாரிகள், பெற்றோலியம், நீர் வழங்கல், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், சர்வேயர்கள், உள்ளுர் வருவாய்த் தொழிற்சங்கங்கள் என 47 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன.

1 லட்சத்துக்கும் மேலான மாத வருமானத்திற்கு 6% முதல் 36% வரை வரி விதிப்பதால் பல துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

தமது கோரிக்கைகளை பரிசீலிக்க ஜனாதிபதி விருப்பம் தெரிவித்ததையடுத்து, தற்போதைய பணிப்புறக்கணிப்பு இன்று (16) காலை 8.00 மணிக்கு தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொடுப்பனவு வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேற்று முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்று காலை 6.30 மணியளவில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியம் எமக்கு தெரிவித்துள்ளது.

துறைமுக ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்று காலை 7.00 மணிக்கு முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுதந்திர துறைமுக ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே தெரிவித்துள்ளார்.

மின்சார ஊழியர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தம் நேற்றிரவு முதல் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வங்கி ஊழியர்கள் இன்று காலை 8.00 மணி முதல் வழமை போன்று கடமைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க ஒற்றுமைக்கு ஆதரவாக தபால் ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்ததாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக லோகோமோட்டிவ் ரயில்வே பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.யு.கொந்தசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொழிற்சங்கம் இன்று பிற்பகல் கூடி அதன் எதிர்கால நடவடிக்கை குறித்து தீர்மானிக்கவுள்ளது.

No Comment
Add Comment
comment url