விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மஹிந்தானந்த

Mahindananda sent back from the airport - Special report

விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மஹிந்தானந்த : வெளிநாட்டு விஜயம் ஒன்றிற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவை வழிமறித்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் கடவுச்சீட்டு தரவுகளுடன் தொடர்புடைய மற்றுமொருவரின் தரவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கணினியில் சரியான தகவல்களைப் பதிவு செய்த அதிகாரியின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment