பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்களுக்கான விலை தாள் பற்றாக்குறையால் வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதனால் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதில் பெற்றோர்கள் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை சலுகை விலையில் வழங்க சதொச நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொச விற்பனைப் பிரிவின் தலைவர் சவன் காரியவசம் தெரிவித்தார்.
நாடு பூராகவும் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுவதாக காரியவசம் தெரிவித்தார்.
Post a Comment