ஏமனில் நிதி உதவி வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஒரு பள்ளியில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, நிதியுதவி நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்துள்ளதுடன் 322 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு சுமார் $9 (£7; €8) வரை நிதியுதவியாக இருந்ததை அறிந்த மக்கள் ஒரே நேரத்தில் பள்ளிக்கு குவிந்ததாக கூறப்படுகிறது.
Post a Comment