இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
முத்தையா முரளிதரனின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு வெளியாகியுள்ளது.
தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த மாதுர் மிட்டல், இப்படத்தில் முத்தையா முரளிதரனாக நடிக்கிறார்.
இப்படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்பால் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
Post a Comment