கொழும்பில் 24 மணிநேர நீர் வெட்டு

24 hour water cut in Colombo

கொழும்பில் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி இன்று (4) பிற்பகல் 2 மணி முதல் நாளை (5) பிற்பகல் 2 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு 1, 2, 3, 4, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கும் கடுவலை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் நீர் விநியோகம் தடைப்படும்.

மேலும், குறித்த காலப்பகுதியில் கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், வெள்ளப்பிட்டி மற்றும் கொட்டிக்காவத்தை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மாளிகாகந்த நீர் நிலையத்திற்கான நீர் விநியோக குழாய் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No Comment
Add Comment
comment url