18 ஹேர்பின் வளைவுகள் : கண்டி – மஹியங்கனை பிரதான வீதி தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

18 hairpin bends

18 ஹேர்பின் வளைவுகள் : மண்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி – மஹியங்கனை பிரதான வீதி தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

நேற்று (19) பிற்பகல் 18 வளைவு வீதியின் இரண்டாவது வளைவில் மண்சரிவு மற்றும் கற்பாறைகள் காரணமாக வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

வீதியில் இருந்த மண் மேடுகள் மற்றும் கற்கள் அகற்றப்பட்டு மீண்டும் வீதியூடான போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment